மு.க.ஸ்டாலின், பாலாஜி எக்ஸ் தளம்
தமிழ்நாடு

கத்திக்குத்தில் காயமடைந்த மருத்துவர் | உடல்நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

பணியின்போது கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

Prakash J

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி என்பவரை சிகிச்சை பெற்றுவந்த பெண்ணின் மகன் விக்னேஷ் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் என்பவரை போலீசார் கைதுசெய்துள்ளனர். மேலும், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, விக்னேஷ் கத்தியால் தாக்கியதில், மருத்துவர் படுகாயம் அடைந்ததை அடுத்து, அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார். அப்போது, மருத்துவர் பாலாஜியின் உடல்நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதையும் படிக்க: காணாமல் போன 6 பேர்| ”அவர்கள் அப்பாவிகள்” - பாதுகாப்பாய் ஒப்படைக்க மணிப்பூர் நபர் வேண்டுகோள்!