தமிழ்நாடு

கால்பந்து போட்டியில் கைகலப்பு: போர்க்களமாகிய மைதானம்!

கால்பந்து போட்டியில் கைகலப்பு: போர்க்களமாகிய மைதானம்!

webteam

தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டியின்போது, ரசிகர்கள் மைதானத்திற்குள் கடுமையாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி நேற்றிரவு நடந்த நிலையில், கேரளா அணியும் கூடலூர் படந்துரை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடந்த இறுதிப் போட்டியில் முதலில் கேரளா அணி கோல் அடித்தது. இதனால் கோபமடைந்த கூடலூர் அணியின் ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைந்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. 

மைதானத்திற்குள் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். காவல்துறையினர் இருதரப்பினரையும் அப்புறபடுத்தினர். இதில் காவலர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேரளா அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. வெற்றிபெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் பணமும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது.