சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், இன்று காலை 9.30 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்
பொய்யாமொழி பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடுகிறார்.
நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்கும் விதமாக, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒவ்வொரு கல்வியாண்டிலும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது.