தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: தடுப்பூசி முகாம் | இன்று நீட் தேர்வு |

விரைவுச் செய்திகள்: தடுப்பூசி முகாம் | இன்று நீட் தேர்வு |

Sinekadhara

இன்று தடுப்பூசி முகாம்; பரிசுகள் அறிவிப்பு: தமிழ்நாடு முழுவதும் இன்று 40 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவிருக்கிறது. பொதுமக்களை ஊக்குவிக்க தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை அரசு அறிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. பங்கேற்கும் மாணவர்களுக்கு N - 95 முகக்கவசம் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக நாளை தீர்மானம்: நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டிளித்திருக்கிறார்.

விபத்துக்கு விமானியின் பிழையே காரணம்: கேரளாவில் 21 பேர் உயிரிழக்க காரணமான விமான விபத்துக்கு விமானியின் பிழையே காரணம் என ஓராண்டுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட விசாரணை பணியகத்தின் அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் அளித்திருக்கிறது.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கணித்திருக்கிறது. ஓரிரு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

உணவு விஷமானது எப்படி? - அதிர்ச்சி தகவல்: தந்தூரி சிக்கன் சாப்பிட்ட சிறுமி உயிரிழந்ததை அடுத்து உணவக உரிமையாளர், மாஸ்டர் கைது செய்யப்பட்டனர். ஆரணி முழுவதும் ஓட்டல்களில் அதிரடி சோதனையில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்தொகை திட்டம் தொடக்கம்: அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்ற உள்ளதாக உறுதியளித்திருக்கிறார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் நண்பரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 5 மணி நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

பனாரஸ் பல்கலை.யில் பாரதி பெயரில் தமிழ் இருக்கை: வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.பாரதியார் நினைவு நூற்றாண்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குஜராத் முதலமைச்சர் பதவி விலகல்: குஜராத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழலில், முதலமைச்சர் விஜய் ருபானி பதவி விலகினர். பாரதிய ஜனதாவின் தோல்விகளுக்கு பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி விமர்சனம் செய்திருக்கிறது.

அமெரிக்க கருப்பு நாள் நினைவு தினம்: பயங்கரவாத தாக்குதல் நினைவு தினத்தையொட்டி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் பிரமாண்ட அமெரிக்க கொடி பறக்க விடப்பட்டது. நியூயார்க் இரட்டைக் கோபுரம் முன்பு அதிபர் பைடன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.