தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: மம்தா விளக்கம் to மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் விநியோகம் நிறுத்தம் வரை

விரைவுச் செய்திகள்: மம்தா விளக்கம் to மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் விநியோகம் நிறுத்தம் வரை

Sinekadhara

கொரோனா சிகிச்சைப் பொருட்களுக்கு மத்திய அரசு உடனடியாக வரி விலக்கு தராதது ஏன்? என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் - தமிழக அரசு: ஊரடங்கு காலத்தில் 50 சதவிகித ஊழியர்களுடன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மட்டும் தடை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம்: கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக வழங்கப்படும் எனவும், மேலும் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பிரதமர் சந்திப்பு புறக்கணிப்பு - மம்தா விளக்கம்: புயல் தொடர்பான கூட்டத்திற்கு ஆளுநரையும் பாஜக தலைவரையும் அழைத்ததால் பிரதமருடனான சந்திப்பை புறக்கணித்தேன் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.

மாநிலங்களுக்கு ரெம்டெசிவிர் விநியோகம் நிறுத்தம்: மாநில அரசுகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து விநியோகத்தை மத்திய அரசு நிறுத்தியது. தேவையை விட உற்பத்தி கூடியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் 2ஆவது அலகிலும் ஆக்சிஜன் உற்பத்தி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2ஆவது அலகிலும் நாளை முதல் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அலகில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது கூடுதலாக தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரள விருதை திருப்பி அளிக்கும் வைரமுத்து: கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கப் போவதாக வைரமுத்து அறிவித்துள்ளார். விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என அவர் குற்றச்சாட்டியுள்ளார்.

நச்சு மது குடித்ததில் 22 பேர் மரணம்: உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் நச்சுத்தன்மையுள்ள மது குடித்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 28 பேர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள்: கொரோனாவால் பாதியில் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

குமுறும் எரிமலை: இத்தாலியில் மவுன்ட் எட்னா எரிமலை வெடித்துக் குமுறத்தொடங்கியது. அதில் செந்நிறத்தில் நெருப்பு தகித்துக்கொண்டிருக்கிறது.