தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: கோவையில் முதல்வர் | வைரமுத்து விருது சர்ச்சை | ஊரடங்கு அப்டேட்

விரைவுச் செய்திகள்: கோவையில் முதல்வர் | வைரமுத்து விருது சர்ச்சை | ஊரடங்கு அப்டேட்

Sinekadhara

கொரோனா வைரஸ் முதன்முதலில் எப்படி பரவியது என ஆய்வு செய்ய வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கைக்கு இந்தியாவும் ஆதரவு தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து கொரோனா அலை - ராகுல் எச்சரிக்கை: இந்தியாவில் தடுப்பூசி போடும் நடைமுறைகளை மாற்றியமைக்காவிட்டால் அடுத்தடுத்து பல கொரோனா அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் மீண்டும் ஆய்வு செய்கிறார் முதல்வர்: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ஆய்வு செய்யவுள்ளார். தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் கேட்டறிகிறார்.

கொரோனாவின் பிடியில் கோவை: கொரோனா பாதிப்பால் திணறும் கோவையில், கூடுதலாக 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளின் காத்திருப்பு எண்ணிக்கை குறைகிறது.

தமிழகத்தில் 400 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 400ஆக உயர்ந்துள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது என மருத்துவ வல்லுநர் குழு உறுதி அளித்துள்ளனர்.

வைரமுத்துவும், விருது அறிவிப்பு சர்ச்சையும்: கவிஞர் வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்ட ONV விருதுக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததால், முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக ONV கலாசார மையம் அறிவித்துள்ளது.

13 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்: சென்னை, காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையாத நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.