தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: சிவசங்கர் பாபா - ஆபாச சாட் அம்பலம் | கொலம்பஸ் சிலை உடைப்பு

விரைவுச் செய்திகள்: சிவசங்கர் பாபா - ஆபாச சாட் அம்பலம் | கொலம்பஸ் சிலை உடைப்பு

Sinekadhara

25 மாவட்டங்களில் 100க்கு கீழ் தொற்று: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 25 மாவட்டங்களில் 100க்கும் கீழ் தொற்று பதிவாகி இருக்கிறது.

விவசாய நிலத்தில் வெளியேறும் கச்சா எண்ணெய்: திருவாரூர் அருகே ஓஎன்ஜிசியின் குழாய் உடைந்து விளைநிலத்தில் கச்சா எண்ணெய் வெளியேறி வருகிறது. குறுவை சாகுபடிக்கு தயாராகிவந்த சூழலில் நிலம் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

டிஜிபியாக இன்று பதவியேற்கிறார் சைலேந்திரபாபு: தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏ.கே. திரிபாதி ஓய்வு பெற உள்ள நிலையில், இன்று சைலேந்திரபாபு பொறுப்பேற்கிறார்.

ஆபாசமாக 'சாட்' செய்தது அம்பலம்: சிவசங்கர் பாபாவின் இ-மெயிலை முடக்கி சிபிசிஐடி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் மாணவிகளுக்கு ஆபாசமாக மெயில் அனுப்பியது அம்பலமானதைத் தொடர்ந்து லேப்டாப் மற்றும் CDக்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை - தடுப்பூசி இல்லாததால் போராட்டம்: மதுரையில் கொரோனா தடுப்பூசிக்காக காத்திருந்த மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்பூசி இல்லை என ஊழியர்கள் கூறியதால் அதிகாலை 4 மணி முதலே காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

ரூ.200 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் 36 ஏக்கர் அரசு நிலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்டது.

ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு: சிறார்களின் ஆபாச படங்கள் பதிவிடப்படுவதாக குற்றச்சாட்டி ட்விட்டர் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. எல்லை பாதுகாப்பு, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் அனுமதி?: அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

கோவாக்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில். 2,406 கோடி ரூபாயில் 2 கோடி மருந்து வாங்கவிருந்த நிலையில், நிதி முறைகேடு காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொலம்பஸ் சிலை உடைப்பு: கொலம்பியாவில் நீடிக்கும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் கொலம்பஸ் சிலையை எதிர்க்கட்சியினர் உடைத்தனர்.

ஜெர்மனியை வெளியேற்றியது இங்கிலாந்து: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனியை வெளியேற்றியது இங்கிலாந்து. மற்றொரு போட்டியில் கடைசி நிமிட கோலால் ஸ்வீடனை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது உக்ரைன்.