இந்தியாவில் 102 நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 37,566 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மின்தடை இனி இருக்காது - செந்தில் பாலாஜி: தமிழகத்தில் இனி மின்தடை உறுதியாக இருக்காது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். மின்வாரிய பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
புழல் சிறைக்கு மணிகண்டன் மாற்றம்: நடிகை அளித்த புகாரில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சைதாப்பேட்டை சிறையில் இருந்து திடீரென புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். சைதாப்பேட்டை கிளைச்சிறையில் சொகுசு வசதிகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5,6வது அணு உலைகளுக்கு இன்று கட்டுமானம்: கூடங்குளத்தில் 5 மற்றும் 6ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகள் இன்று தொடங்கப்படுகிறது. இதன்மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை - தாய் உள்பட 9 பேர் கைது: திருமணமே செய்து கொள்ளாமல் குழந்தையை பெற்றெடுத்து அதை விற்பனை செய்த வழக்கில் நேற்று குழந்தையின் தந்தை உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தாயும் சேர்ந்து நாடகமாடி குழந்தையை விற்பனை செய்ததால் தாய் உள்பட 5 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
முதியவர்களை ஏமாற்றி ரூ.9 லட்சம் திருட்டு: புதுச்சேரியில் முதியவர்களை ஏமாற்றி 9 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. வங்கிக் கணக்கு விவரங்களை தொலைபேசி மூலம் பெற்று இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.100-ஐ நெருங்கிய பெட்ரோல் விலை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு நூறு ரூபாயை நெருங்கியது. இன்று 31 காசுகள் உயர்ந்து 99.80 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கம்: காஷ்மீர், லடாக்கை தனி நாடு போல் ட்விட்டர் நிறுவனம் சித்தரித்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பையடுத்து சர்ச்சைக்குரிய வரைபடம் நீக்கப்பட்டது.
டிசம்பரில் விண்ணில் பாய்கிறதா ககன்யான்?: ஆளில்லா ககன்யான் விண்கலம் டிசம்பரில் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
லண்டன் ரயில்நிலையத்தில் தீவிபத்து: லண்டன் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் பதற்றம் நிலவியது. 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
காலிறுதியில் ஸ்பெயின், சுவிட்சர்லாந்து: யூரோ கோப்பை கால்பந்தில் கூடுதல் நேரத்தில் குரேஷியாவை வென்றது ஸ்பெயின். பெனால்டி சூட் அவுட் வரை நீடித்த ஆட்டத்தில் ஃபிரான்ஸை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து.
அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.