தமிழ்நாடு

விரைவுச் செய்திகள்: நீட் - மத்திய அரசுக்கு உத்தரவு |கருப்பு பூஞ்சை - 30 பேர் பார்வையிழப்பு

விரைவுச் செய்திகள்: நீட் - மத்திய அரசுக்கு உத்தரவு |கருப்பு பூஞ்சை - 30 பேர் பார்வையிழப்பு

Sinekadhara

நீட் தேர்வு வழக்கு - மத்திய அரசுக்கு உத்தரவு: நீட் தேர்வு பாதிப்பை ஆராயும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இறந்ததாக சர்ச்சை - உயிருடன் இருந்த குழந்தை மரணம்: தேனியில் மருத்துவர்கள் இறந்ததாக கூறிய குழந்தை மயானத்தில் உயிருடன் இருந்ததால், மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தது.

கர்நாடகாவில் புதிய அணை - கட்டுமானப் பணியில் தமிழர்கள்: மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஓசூர், தளி, கிருஷ்ணகிரி பகுதி நிறுவனங்களில் இருந்து கட்டுமான பொருட்கள் சென்றது புதிய தலைமுறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேகதாது - துரைமுருகன் டெல்லி பயணம்: மேகதாது, மார்க்கண்டேய நதி அணைகள் விவகாரம் குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் செகாவத்துடன் பேச உள்ளேன் என தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டியளித்துள்ளார்.

கருப்புப் பூஞ்சையால் 30 பேர் கண் பார்வை இழப்பு: கோவை மாவட்டத்தில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 30 பேர் ஒரு கண்ணில் பார்வையை இழந்தனர். சிகிச்சைக்கு தாமதமாக வந்ததால் கண் பார்வையை இழந்ததாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அரசுப்பள்ளியில் கட்டணம்: பெரம்பலூர் அருகே அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 6-ம் வகுப்புக்கு 550 ரூபாயும், 9-ம் வகுப்புக்கு 750 ரூபாயும் வாங்கப்படுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது 2-வது நாளாக தாக்குதல்: தமிழக மீனவர்கள் மீது 2-வது நாளாக இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். கற்களைக் கொண்டு எரிந்ததோடு, வலைகளை வெட்டியும் அட்டூழியம் செய்துள்ளனர்.

50% பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி: தமிழ்நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்கள் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி: தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்த நிலையில் வழிப்பாட்டு தலங்கள் திறக்கப்பட்டது. பக்தர்கள் உற்சாகமாக வழிபாடு செய்கின்றனர்.

மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: கடலூரில் பெய்த மழையால் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. ஈரப்பதம் 17 சதவிகிதமாக இருப்பதாகக் கூறுவதால் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

ஜெஃப் பெசோஸ் பதவி விலகல்: அமேசான் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகினார் ஜெஃப் பெசோஸ். விண்வெளி திட்டப் பணிகளில் கவனம் செலுத்துகிறார்.

முற்றிலும் இடிக்கப்பட்ட கட்டடம்: அமெரிக்காவில் சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டடம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. புயல் அச்சுறுத்தல் காரணமாக நவீன முறையில் தரைமட்டமாக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழப்பு 50ஆக உயர்வு: பிலிப்பைன்ஸில் ராணுவ வீரர்கள் சென்ற விமானம் தரையிறங்கும் போது விழுந்து நொறுங்கிய விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்திருக்கிறது. 49 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.