தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை
செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின்
நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது.
ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சமவாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்
பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அதிமுக
சில நாட்கள் கட்சியினரை டிவி விவாதங்கள் மற்றும் பேட்டி கொடுப்பதற்கு தடை விதித்திருந்ததது. பின்னர் அது திரும்பப்பெறப்பட்டது.