தமிழ்நாடு

ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் வீடு திரும்பினர்

ஆந்திராவில் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் வீடு திரும்பினர்

webteam

ஆந்திராவில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட வேலூர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 84 பேர் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருப்பதி அருகே ஆஞ்சநேயர்புரத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாகக் கூறி திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேர் மற்றும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 42 பேரை ஆந்திர அரசு கைது செய்தது. இருப்பினும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும், மீண்டும் செம்மரம் வெட்ட வரக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நல்லெண்ண அடிப்படையில் ரேணிகுண்டா வட்டாட்சியர் நரசிம்ம நாயுடு, அனைவரையும் விடுவித்தார். இதையடுத்து தமிழக அரசு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு அரசுப் பேருந்தை வரவழைத்து அங்கிருந்து தமிழர்களை அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு கடப்பாவில் இருந்த  தமிழகம் அழைத்துவரப்பட்டனர். வேலூரை சேர்ந்த 42பேரையும் அம்மாவட்ட ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் ரமேஷ் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார்.  அதேபோல் திருவண்ணாமலையைச் சேர்ந்த 42 பேரையும் போளூர் வட்டாட்சியர் பாலாஜி அழைத்து சென்றார்.