தவெக தலைவர் விஜய் pt web
தமிழ்நாடு

தவெக மாநாடு | அதிகாரப்பகிர்வு.. விஜய் பேச்சின் சூட்சமம் என்ன? விசிகவுக்கான நேரடி அழைப்பா?

"நம்மள நம்பி நம்மகூட களமாட வரவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்துல பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும்.." விஜய்

Angeshwar G

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடந்தது. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. 4 மணிக்கு மேடைக்கு வந்த விஜய் தொண்டர்களுக்கு கையசைத்தார்..

'உங்களுக்காக உழைக்க நான் வரேன்' - தவெக தலைவர் விஜய்

ராம்ப் வாக்கை முடித்துக்கொண்டு மேடைக்கு வந்த விஜய் தொண்டர்களின் உற்சாகத்தைக் கண்டு கண் கலங்கினார். தமிழ்நாட்டின் மன்னர்களுக்கும், சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றினார். பின் கட்சிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், செயல்திட்டம் உள்ளிட்டவைகள் விளக்கப்பட்டன. பின் தவெக தலைவர் விஜய் பேசினார்.

அப்போது குறிப்பிட்ட இடத்தில், “நம்மள நம்ம செயல்பாட்ட நம்பி நம்மலோட சிலபேர் வரலாம் இல்லையா? அதுக்கான அரசியல் சூழல் உருவாகலாம் இல்லையா? அவங்களையும் அன்போட அரவணிக்கனும் இல்லையா? நம்மள நம்பி வரவங்கள அரவணிச்சுதான பழக்கம்.. நம்மள நம்பி நம்மகூட களமாட வரவங்களுக்கும் ஆட்சி அதிகாரத்துல பங்களிப்பு தந்து அதிகாரப்பகிர்வு செய்யப்படும்..” என தெரிவித்தார்.

தவெக மாநாடு விஜய்

சமீபத்தில், விசிக தலைவர் திருமாவளவன் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என வலியுறுத்திருந்தார். விஜய்யின் இந்த கருத்து கூட்டணிக்கான அச்சாணியாகவே பார்க்கப்படுகிறது. கொள்கை எதிரியாக பாஜகவையும், அரசியல் எதிரியாக திமுகவையும் குறிப்பிட்டிருந்தார் விஜய்.. ஆனால், கூட்டணிக்கு தயாராக இருப்பதாகவே தனது பேச்சில் தெரிவித்துள்ளார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...