தவெக, விஜய் Facebook
தமிழ்நாடு

த.வெ.க. மாநாடு | விக்கிரவாண்டியில் நாளை காலை பூமி பூஜை.. விஜய் பங்கேற்பு?

Prakash J

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்தகட்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். அந்த வகையில் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை அறிமுகப்படுத்தினார்.

தவெக தலைவர் விஜய்

இந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், நாளை (அக்.4) காலை மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு பூஜை நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். பூமி பூஜைக்கு பின் மாநாட்டுத் திடலில் பந்தல் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!