தமிழ்நாடு

தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

jagadeesh

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தில்
விதி மீறில் உள்ளது. உரிய கல்வித்தகுதி இன்றி, அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
எனவே அவர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேலுமணி தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.