தமிழ்நாடு

உண்ண உணவின்றி வளைகுடா நாடுகளில் சிக்கத்தவிக்கும் தமிழக இளைஞர்கள்.. மீட்க அரசுக்கு கோரிக்கை

உண்ண உணவின்றி வளைகுடா நாடுகளில் சிக்கத்தவிக்கும் தமிழக இளைஞர்கள்.. மீட்க அரசுக்கு கோரிக்கை

kaleelrahman

வளைகுடா நாடுகளில் சிக்கி தவிக்கும் 750 தமிழக இளைஞர்களை மீட்க அரசுக்கு கோரிக்கை.

தமிழகத்தை சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒமன் தலைநகரில் மஸ்கட்டில் உள்ள அல் துருக்கி அன்டு தாசீம் என்டர்பிரைசஸ் எல்எல்சி என்ற தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா நோய்பரவலால் அவர்கள் வேலை பார்த்து வந்த நிறுவனம் கடந்த ஜுன் 7ஆம் தேதிமுதல் மூடப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆதனால் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சொந்த ஊருக்கு செல்ல விமானவசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

<
ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வேலை பார்க்கும் இந்தியாவை சேர்ந்த மற்ற மாநிலத்தவர்களை அந்தந்த மாநில அரசு, மத்திய அரசின் மூலம் வானூர்தி ஏற்பாடு செய்து அவர்கள் சொந்த ஊருக்கு மீட்டு வந்துள்ளனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களை அழைத்துவர அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.


எனவே தமிழக அரசு ஓமன் தலைநகர் மஸ்கட்டில் ஸிப் அருகில் உள்ள அல்குத் லிட்டில் இந்தியா முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், சிவகங்கை, வேலூர், மதுரை, மேலூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருவாரூர், சென்னை (வேளச்சேரி), பாண்டிச்சேரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய அனைத்து மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வேலையின்றியும், உண்ண உணவு இன்றியும் தவிக்கிறார்கள். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக இருப்பதால் அவர்களை உடனடியாக மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் .