மாணவி ரோஹினி pt web
தமிழ்நாடு

கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடியில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி.. துறையூர் மாணவி சாதனை

திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பழங்குடியின மாணவி JEE தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்ஐடியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

PT WEB

துறையூர் அருகே பச்சைமலையை சேர்ந்த மலைவாழ் பகுதி, பழங்குடியின மாணவியான ரோஹிணி, ஜேஇஇ தேர்வில் 73.8 சதவீத மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வெழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலிடமும் பிடித்துள்ளார். ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பழங்குடியின மாணவி ரோஹிணி, திருச்சி என்ஐடி கல்லூரியில் வேதிப் பொறியியல் படிப்பை தேர்வு செய்துள்ளார்.

கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி என்ஐடி கல்லூரியில் சேர்ந்த முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ரோஹிணி பெற்றுள்ளார். இவருடன் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற சுகன்யா என்ற பழங்குடியின மாணவியும் திருச்சி என்ஐடி கல்லூரியில் சேர்ந்துள்ளார். என்ஐடி கெமிக்கல் ஆய்வகத்தை பார்வையிட சென்றபோது ஏற்பட்ட ஆர்வமே ஜேஇஇ தேர்வில் வெற்றிபெற தூண்டுதலாக அமைந்ததாக, மாணவி ரோஹிணி தெரிவித்துள்ளார்.