நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் மற்றும் அவரது சகோதரியை வீடு புகுந்து சக மாணவர்களே கொடூரமாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையர் ரகுபதி தலைமையிலான 3பேர் கொண்ட குழுவினர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியிலுள்ள மாணவரின் வீடு மற்றும் அவர் பயின்ற பள்ளியிலும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
நாங்குநேரியில் இதேபோன்று வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என பொதுமக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பின், அவர் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும், பள்ளியில் அனைத்து ஆசிரியர்களையும் வரவழைத்து பள்ளி வகுப்பறையில் சாதி ரீதியிலான துன்புறுத்துதல் ஏதும் நடைபெற்று வருகிறதா எனக் கேட்டறிந்தார்.