தமிழ்நாடு

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்: நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல்

தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல்: நேற்று ஒரே நாளில் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல்

நிவேதா ஜெகராஜா

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, முதல் இரண்டு நாள்களில் 4,975 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பின்னர் அதற்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமணு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேட்பு மனு தாக்கல் குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை அளித்துள்ள தகவலின்படி, நேற்று ஒரே நாளில் மொத்தம் 4,597 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முதல் நாளில் 378 பேர் வேட்பு மனு தாக்கலை அளித்துள்ளனர். முதல் இரண்டு நாள்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,840 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1,091 பேரும் வேட்புமனு அளித்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 43 பேரும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.