தமிழ்நாடு

மார்ச் 9-ஆம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

webteam

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மார்ச்-9 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது.

2020-21-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிப்ரவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 20-ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மார்ச் 9-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த தொடரின்போது பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கைக‌ள் மீது விவாதம் நடைபெற உள்ளது. மார்ச் 9-ஆம் தேதி கூடும் கூட்டத்தொடர் 30 முதல் 40 நாட்கள் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் திட்டங்கள், அவற்றின் நிலை உள்ளிட்ட அம்சங்‌கள் குறித்து விவாதிக்கப்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் வரும் நிலையில், 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.