தமிழ்நாடு சட்டப்பேரவை கோப்புப்படம்
தமிழ்நாடு

ஜூன் 24 ஆம் தேதி தொடங்குகிறது தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் - சபாநாயகர் அப்பாவு

ஜூன் 24 ஆம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் காலை 10 மணிக்கு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

webteam

செய்தியாளர்: ராஜ்குமார்

தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்கள் மத்தியில் தெரிவிக்கையில், “தமிழக சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 24 அன்று நடைபெறும். அதேபோல் மானிய கோரிக்கை எந்தெந்த தேதியில் நடக்கும், எத்தனை நாட்கள் பேரவைக் கூட்டம் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும்.

TN Assembly

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. இதை இன்னும் படிப்படியாக உயர்த்த அரசு திட்டமிடும். நடந்து முடிந்த விளவங்கோடு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர் பதவி ஏற்பு நாள் குறித்து முறையாக அறிவிக்கப்படும்” என்றார்.

தேர்தல் நடத்தை விதிகள் எல்லாம் முடிந்ததும் கூட இருக்கும் பேரவைக் கூட்டத் தொடர் என்பதால் முக்கியமான விவாதங்கள் இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக காவிரி நீர் தமிழகத்திற்கு நிலுவையில் இருப்பது, முல்லை பெரியாறு அணையில் புதிய அணை கட்டுவது போன்றவை எதிரொலிக்கும் என தெரிகிறது.

சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்

இத்துடன் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது தொடர்பாகவும் பேசப்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் தமிழக அரசு சார்பில் மகளிர் ஆயிரம் ரூபாய் திட்டம் தொடர்பாக விண்ணப்பம் செய்வது, இரண்டு லட்சம் ரேஷன் அட்டை வழங்குவது, வேளாண்துறையில் விவசாயிகள் கோரிக்கை உள்ளிட்டவை விவாதிக்கப்படும் என தெரிகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்டவைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டும் இருக்கிறது.