ptr palanivel thiyagarajan pt
தமிழ்நாடு

"AI தொழில்நுட்பத்தால் கல்வித்துறையில் பெரிய மாற்றம் வரலாம்; ஆனால் இந்த அச்சமும்.."-அமைச்சர் பிடிஆர்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால், கல்வித்துறையில் பெரிய மாற்றம் வரலாம் என்று கூறியுள்ளார் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

PT WEB

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "பன்னாட்டு கணித்தமிழ் 24" மாநாட்டை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "இது செயற்கை நுண்ணறிவின் யுகம். கணினி தொழில்நுட்பம் என்பதை எல்லாம் தாண்டி, அதன் மற்றொரு எல்லையை நாம் இன்று தொட்டிருக்கிறோம். அன்றாட அலுவலக பணி தொடங்கி, நம்முடைய வாழ்வில் எல்லாவற்றிலும், இந்த செயற்கை நுண்ணறிவு இருக்கும் என அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

அன்றாட அலுவலக பணி தொடங்கி, நம்முடைய வாழ்வில் எல்லாவற்றிலும், இந்த செயற்கை நுண்ணறிவு இருக்கும் என அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவால் கல்வித்துறையில் ஒரு பெரும் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவம் மற்றும் தொழிற்சாலைகளில் செயற்கை நுண்ணறிவு ஒரு வரமாக அமையும் என கருதப்படுகிறது. அதே நேரத்தில் சமூகம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் என்னென்ன தாக்கத்தை இந்த தொழில்நுட்பம் ஏற்படுத்தப்போகிறது என்ற அச்சமும் எழுந்துள்ளது” என்றார்.

தொடர்ந்து, ”செயற்கை நுண்ணறிவில் மொழியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, நம்முடைய மொழியையும், நம்மையும் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தனித்தமிழ் வளர்ச்சியில் பெரும் முனைப்பை காட்டியவர் முன்னாள் முதல்வர் கலைஞர். தனித்தமிழை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தோடு வளர்த்தெடுக்க வேண்டும் என்று கலைஞர் முனைப்பு காட்டினார்.

அதன் ஒரு பகுதி தான் இன்றைக்கு இந்த முன்னெடுப்புகள். தமிழை மேம்படுத்தும் முயற்சிகளை செய்து வருகிறோம். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தமிழ் மேலும் மேன்மை அடையும்" என்றார்.