சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதில் நாட்டிலேயே தமிழகம் எடுத்துக்காட்டாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
556 சிறப்பு மருத்துவர்கள், 175 இளநிலை உதவியாளர்கள், 49 தட்டச்சர்கள், 7 சுருக்கெழுத்து தட்டச்சர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் பேசிய முதலமைச்சர் அரசு மருத்துவமனையிலுள்ள காலிப்பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுவதாக தெரிவித்தார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகக் கூறிய முதலமைச்சர், தமிழகத்தில் சுகாதாரப் பணிகள் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார். யாருக்கும் கிடைக்காத பெருமை மருத்துவர்களுக்கு கிடைத்துள்ளதாகக் கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நோயாளிகளைக் காக்கும் பாக்கியம் மருத்துவர்களுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.