தமிழ்நாடு

உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் பன்வாரிலா‌ல் சந்‌திப்பு

உள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் பன்வாரிலா‌ல் சந்‌திப்பு

webteam

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லி‌யில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்து எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்றுக் கொண்ட பின் அமைச்சரவை அமைத்த பிறகு முதல்முறையாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார். 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய நிலைமை, சட்டம் - ஒழுங்கு விவகாரங்கள் போன்ற அமைச்சர் அமித் ஷாவிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் எடுத்துரைத்தார். 

மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக ஆந்திரா, தெலுங்கானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் அமித்ஷாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமித் ஷா உடனான இந்த சந்திப்பு பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.