தக்காளி விலை முகநூல்
தமிழ்நாடு

தாறுமாறாக உயரும் தக்காளி விலை... பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை!

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூட்டுறவுத் துறை மூலம் செயல்படும் பண்ணை பசுமைக் கடைகளில் தக்காளி கிலோ 61 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

PT WEB

தொடர் மழை காரணமாக அண்டை மாநிலங்களிலிருந்து சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால், பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்யப்படும் தக்காளியின் விலை கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tomato

இந்நிலையில், கொள்முதல் செய்யும் விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பண்ணை பசுமைக் கடைகளில் 61 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் மூலமாகவும், அம்மா உணவகங்களுக்கு பண்ணை பசுமைக் கடை ஊழியர்கள் வாயிலாகவும் தக்காளி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மொத்தமாக 62 பண்ணை பசுமைக் கடைகள் மற்றும் 3 நகரும் பசுமைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.