தமிழ்நாடு

ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி தரக்கூடாது : ஸ்டெர்லைட் ஆலை வாதம்

ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி தரக்கூடாது : ஸ்டெர்லைட் ஆலை வாதம்

Veeramani

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க தமிழக அரசுக்கு அனுமதி தரக்கூடாது என்று ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையில் மாநில அரசு ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளித்தால் ஆபத்து  ஏற்படலாம் என்றும், தூத்துக்குடி ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு முன் தயாரிப்பு மேற்கொள்ள அனுமதி அளிக்கவும் கோரிக்கை வைத்துள்ளது ஆலை நிர்வாகம். ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ளும் நிபுணர்கள் எங்களிடம் மட்டுமே உள்ளனர், தமிழகத்தில் இத்தகைய நிபுணர்கள் இல்லையென்றும் ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக பதிலளித்த தமிழக அரசு, ஸ்டெர்லைட்டின் வாதத்திற்கு உரிய பதிலை தருவோம் எனத் தெரிவித்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பான வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்ட்த்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.