தமிழ்நாடு

'ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்' - திருமாவளவன்

'ஆணவப் படுகொலைகளை தடுக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்' - திருமாவளவன்

kaleelrahman

ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலை போராட்ட வீரர் திலீபனின் நினைவு தினத்தையொட்டி, சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திலீபன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர்...

ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியும் அதை எந்த மாநில அரசும் பின்பற்றவில்லை. எனவே, ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்கு தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.