தமிழ்நாடு

வேதா நிலையம் வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

வேதா நிலையம் வழக்கில் மேல்முறையீடு செய்யாதது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

JustinDurai
வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவில்லமாக மாற்ற வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகளின் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
வேதா நிலையத்தின் நிலம் கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யாதது ஏன் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் விளக்கமளித்தார். அவரது விளக்கத்தில், ''வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றாமல் பொதுமக்களுக்கு செலவிடலாம் எனவும், முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் எனவும் 2020 மே மாதம் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு அறிவுறுத்தி இருந்தது. அந்த உத்தரவையும், இரு நினைவிடங்கள் தேவையில்லை என நீதிபதி என்.சேஷசாயி கடந்த மாதம் உத்தரவிட்டதையும் ஏற்றுக்கொண்டதால் அரசு மேல்முறையீடு செய்யவில்லை'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.