வெப்ப அலை pt web
தமிழ்நாடு

வாட்டி வதைக்கும் வெப்ப அலை.. தமிழ்நாடு அரசு எடுத்த முக்கிய முடிவு

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நேரங்களில் அப்ப அலை தாக்கத்தால் உயிரிழந்தால் நான்கு லட்சம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் ராஜ்குமார்

தமிழ்நாடு அரசு சார்பாக கோடை காலங்களில் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அதற்கான பல்வேறு விதமான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வுமையம்

அது மட்டுமில்லாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்குவதற்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என சில வழிகாட்டுதல்கள் வழங்கி தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.