செந்தில் பாலாஜி, அமைச்சரவைக் கூட்டம் pt web
தமிழ்நாடு

கோவைக்கு செந்தில் பாலாஜி... 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக, 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

PT WEB

தமிழக அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகான முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் முடிவில், மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கான நலத் திட்டங்களை கண்காணிக்கவும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட அவர்கள், இயற்கைச் சீற்றம், நோய்த் தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளையும் மேற்கொள்ள உள்ளனர். இதன்படி,

  • நெல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் கே.என். நேருவும்,

  • தேனி மாவட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமியும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

  • திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • தருமபுரி மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும்,

  • தென்காசி மாவட்டத்திற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

  • இதேபோல், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசுவும்,

  • நீலகிரி மாவட்டத்திற்கு மு.பெ. சாமிநாதனும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரிக்கு சக்கரபாணி,

கோவைக்கு செந்தில்பாலாஜி,

காஞ்சிபுரத்திற்கு ஆர்.காந்தி,

பெரம்பலூர் மாவட்டத்திற்கு எஸ்.எஸ். சிவசங்கர்

ஆகிய அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழியையும்,

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிவ.வீ. மெய்யநாதனையும் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.