தமிழ்நாடு

டாஸ்மாக் கடை திறப்பு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் கடை திறப்பு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

webteam

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தும் நேற்று முன் தினம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு முன்னதாக டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சமூக இடைவெளியை பின்பற்றி கடைகளை திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நேற்று இதுகுறித்த அவசர வழக்கில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை எனக்கூறி வீடியோக்களும் போட்டோக்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.