தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

webteam

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒருமாதம் ஊதியம் பொங்கல் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சிறப்பு மிகை ஊதியம் (போனஸ்) அறிவித்துள்ளது. இது தொடர்பாக நிதித்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2018 மார்ச் 31ஆம் தேதி ஊதிய அடிப்படையில் போனஸ் கணக்கிடப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவு அரசுப்பணியாளர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர், மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு, ஒருமாதம் ஊதியம் பொங்கல் போனஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள், துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் தினக் கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்டோருக்கு  போனஸ் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு தமிழக அ‌ரசுப்பணியில் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்கள், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் அனைந்திந்திய பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோருக்கு போனஸ் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.