நாய்கள் இனப்பெருக்க தடையின்கீழ் வரும் வெளிநாட்டு நாய்கள் புதிய தலைமுறை
தமிழ்நாடு

9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்துக்கு தடைவிதித்து தமிழ்நாடு அரசு வரைவு கொள்கை!

நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பாக வரைவு கொள்கை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

Jayashree A, PT WEB

சென்னை போன்ற பெருநகரங்களில் நாய் வளர்ப்பு பிரியர்கள் தங்களின் ஆசைக்காகவும் பாதுகாப்பிற்காகவும் வெளிநாட்டு நாய்களை அதிகம் வாங்கி வளர்ப்பதை பார்த்திருப்போம். அதற்கென்று அவர்கள் மாதம்தோறும் அதிகளவு செலவு செய்வதையும் பார்த்திருப்போம். இதில் தவறேதும் இல்லையெனிலும், சில வெளிநாட்டு நாய்களால் நம் சீதோஷ்ண நிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாது. இதனால் அவற்றின் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும்.

இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டில் 9 வெளிநாட்டு நாய்களின் இனப்பெருக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய தட்பவெப்ப நிலைக்கு ஒவ்வாத வெளிநாட்டு வகை நாய்கள் இனப்பெருக்கத்திற்கு தடை விதித்து வரைவுக்கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட நாய்கள் இனப்பெருக்கம் தொடர்பான வரைவு கொள்கை

இதன்படி Basset Hound, French Bulldog, Alaskan Malamute, Keeshond, Newfoundland, Norwegian Elkhound, Tibetan Mastiff, Siberian husky, Saint Bernard வகை நாய்களின் இனப்பெருக்கத்திற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

மேலும் “அனைத்து நாய் வளர்ப்பாளர்களும் பொறுப்பான முறையில் ‘நாய்கள் இனப்பெருக்க நடைமுறை’களை கடைபிடிக்க வேண்டும். மேலும் நாய்களின் உடல் மற்றும் மனநலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்.

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் (TNAWB) இனப்பெருக்கம் செய்யும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான சான்றிதழை வழங்கும். நாய்கள் வளர்ப்பவர்கள், இனப்பெருக்கம் செய்யப்படும் குறிப்பிட்ட இனம் குறித்து TNAWBல் பதிவு செய்ய வேண்டும். இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தப்படும் நாய்களை, கால்நடை மருத்துவரிடம் முன் உடல் நலம் பரிசோதிக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முழுமையான வரைவு அறிக்கையை, கீழ்க்காணும் இணைப்பை க்ளிக் செய்து வாசிக்கலாம்:

TN Dog Breeding Policy Draft.pdf
Preview