தமிழ்நாடு

’மின் இணைப்பில் முறைகேடா? பட்டியலை கொடுங்கள்; நடவடிக்கை உறுதி’ - அமைச்சர் ஐ.பெரியசாமி

’மின் இணைப்பில் முறைகேடா? பட்டியலை கொடுங்கள்; நடவடிக்கை உறுதி’ - அமைச்சர் ஐ.பெரியசாமி

சங்கீதா

தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் மின் இணைப்பில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் விவசாயிகள் பட்டியலை கொடுத்தால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தினை இன்று காணொளி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் சீவல் சரகில் நடைபெற்ற விழாவில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு ஆண்டில் ஒரு லட்சம் இணைப்பில் விவசாயிகள் இன்றி, வேறு நபர்களுக்கு மின் இணைப்பை வழங்கிவிட்டு, மின்சார வாரியத்தில் முறைகேடு நடந்ததாக, சேலத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர் என்று கேள்வி எழுப்பியதற்கு, பட்டியலை கொடுக்கச் சொல்லுங்கள் மின்சாரத்துறை அமைச்சரிடம் கொடுத்து விசாரணை செய்து யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லுவோம். அப்படி செய்யக்கூடிய அவசியமே கிடையாது. உங்கள் கருத்தில் உடன்படுகிறோம், மின்சார இணைப்பு வழங்காமல் மின்சார இணைப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுவது, உண்மைக்கு மாறானது. 

ஏனென்றால் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார். நாங்கள் அறிவிக்கிறோம் பகிரங்கமாக ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று, அவர் பகிரங்கமாக பட்டியலை சொல்லலாம், ஏன் அதைச் சொல்லவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார், துணைத் தலைவர் இருக்கிறார், நீங்கள் சொல்கிற குற்றச்சாட்டை கொடுங்கள் அது உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். குறைகள் இருப்பது ஆங்காங்கே இருக்கத்தான் செய்யும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.