தமிழ்நாடு

தங்க மங்கை கோமதியை பாராட்டிய முதலமைச்சர் பழனிசாமி

தங்க மங்கை கோமதியை பாராட்டிய முதலமைச்சர் பழனிசாமி

webteam

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றுள்‌ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்‌ளனர்.

வறுமைமிக்க குடும்பத்தில் இருந்து வந்த பெண் கோமதி, ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை பெற்று தந்து நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இதுபோன்று மேலும் பல வெற்றிகளை பெற்று இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு எழுதியுள்ள வாழ்த்து கடிதத்தில், தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் உலக அரங்கில் பெருமை தேடித் தந்திருக்கும் கோமதி மேலும் பல சாதனைகளை நிகழ்த்திட வாழ்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். வீராங்கனை கோமதி மாரிமுத்துவின் வாழ்க்கையும், சாதனையும் தமிழக மகளிருக்கு மிகுந்த ஊக்‌கம் அளிப்பதாக கூறியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவருக்கு தமிழக அரசு உரி‌ய மதிப்பளித்து சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

ஏழை விவசாயியின் மகள் சாதனை புரிந்திருப்பது மனதை நெகிழ வைத்திருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் இந்திய விளையாட்டுத்துறையின் சிறப்பை உலக அளவில் கோமதி மாரிமுத்து நிலைநாட்டியுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.