தமிழ்நாடு

”அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைக”-அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

”அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைக”-அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

நிவேதா ஜெகராஜா

”அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்” எனக்கூறி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு இந்தியா முழுவதுமுள்ள 37 அரசியல் கட்சி தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார்.

சோனியா காந்தி, சரத்பவார், லாலு பிராசத், பவன் கல்யாண், ஓவைசி, ஓபிஎஸ் உட்பட மொத்தம் 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையவும், கூட்டமைப்பின் பிரதிநிதிகளாகவும் தக்க நபர்களை நியமிக்கவும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். சமூக நீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்ல சமூக நீதி கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் முதல்வர் உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக கடிதத்தில் முதல்வர் “சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் சமூக நீதிக் கருத்தியலை ஒடுக்கோவோருக்கு எதிராக இணைந்தால்தான், அவர்களை நம்மால் எதிர்த்துபோரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.