அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு pt web
தமிழ்நாடு

’10 - 12’ அரையாண்டு தேர்வுகள்; புதிய அட்டவணை வெளியீடு - முழுவிபரம்

தமிழ்நாடு முழுவதும் நாளை தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அரையாண்டுத் தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Angeshwar G

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்படும் என்றும், அரையாண்டுத் தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய கால அட்டவணையை வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதன் அடிப்படையில் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் புதன்கிழமை முதல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.

நாளை மறுநாள் செவ்வாயன்று மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப்புத்தகங்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 13 ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அட்டவணைப்படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு ஒரே தேதியில் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி 13 ஆம் தேதி தமிழ், 14 ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம், 15 ஆம் தேதி ஆங்கிலம், 18 ஆம் தேதி கணக்கு, 20 ஆம் தேதி அறிவியல், 21 ஆம் தேதி உடற்கல்வி, 22 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதியம் 2 முதல் 4.30 மணி வரையில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Half Yearly Exam revised time table 6 to 12.pdf
Preview

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரிவுகளுக்கு ஏற்ப தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.