தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில், எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை பேரவையில் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். முக்கியமான பிரச்சனைகளை கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் அளித்து விவாதத்திற்கு எடுத்து கொள்ள எதிர்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1. சொத்துவரி உயர்வு
2. மின் கட்டண உயர்வு
3. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது.
4. தமிழகத்தில் பால் பொருட்களின் விலை உயர்வு.
5. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ( சமீபத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம், வங்கி கொள்ளை, துப்பாக்கி கலாச்சாரம்)
6. கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனையை அரசு தடுக்க தவறிவிட்டது என குற்றச்சாட்டு.
7. விலைவாசி உயர்வு.
8. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட திட்டங்களை மீண்டும் செயல்பட வலியுறுத்துவது.
9. டெல்டா மாவட்டங்களில் மழையினால் குறுவைப் பயிர்கள் சேத கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்.
10. சமீபத்திய அமைச்சர்கள் பேச்சு, தி.மு.க. எம்.எல்.ஏக்களின் அராஜக போக்கு.
11. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும்.
12. தமிழகம் முழுவதும் கெளரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களை நிரந்தரப்படுத்துவது.
13. பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தது குறித்த அம்சங்கள்