SSLC Result PT Desk
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - கெத்து காட்டிய பெரம்பலூர் மாவட்டம்; முழு விவரம்!

தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை - 9,14,3203, மாணவியர்களின் எண்ணிக்கை - 4,55,017, மாணவர்களின் எண்ணிக்கை - 4,59,303

சங்கீதா

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. வழக்கம்போல் மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்றவர்கள் - 91.39%

மாணவர்கள் - 88.16%

மாணவிகள் - 94.66%

கடந்த ஆண்டைவிட 1.32% பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 90.07% தேர்ச்சி பெற்றநிலையில், தற்போது 91.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 1.32% அதிகம் ஆகும். இதேபோல், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு தேர்வில், மாணவர்கள் 85.83% தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 88.16% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில் பெரிய மாற்றமில்லை. கடந்த ஆண்டு 94.38% மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 94.66% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

1. மொழிப்பாடம் - 95.55%

2. ஆங்கிலம் - 98.93%

3. கணிதம் - 95.54%

4. அறிவியல் - 95.75%

5. சமூக அறிவியல் - 95.83%

100% மதிப்பெண் பெற்றவர்கள்:

1. ஆங்கிலம் - 89

2. கணிதம் -3,649

3. அறிவியல் -3,584

4. சமூக அறிவியல் - 360

5. தமிழ் - 0 (யாருமில்லை)

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்:

1. அரசுப்பள்ளிகள் - 87.45%

2. அரசு உதவிபெறும் பள்ளி - 92.24%

3. தனியார் பள்ளிகள் - 97.38%

4. பெண்கள் பள்ளிகள் - 94.38%

5. ஆண்கள் பள்ளிகள் - 83.25%

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:

1. மாநகராட்சி பள்ளி - 82.62%

2. நகராட்சி பள்ளி - 87.67%

3. ஆதிதிராவிடர் பள்ளி - 83.99%

4. பழங்குடியினர் பள்ளி - 86.12%

5. சமூக நலத்துறை பள்ளி - 91.53%

6. கள்ளர் பள்ளி - 92.55%

7. வனத்துறை பள்ளி - 92.23%

முதல் 5 மாவட்டங்கள்

1. பெரம்பலூர் - 97.67%

2. சிவகங்கை - 97.53%

3. விருதுநகர் - 96.22%

4. கன்னியாகுமரி - 95.99%

5. தூத்துக்குடி - 95.58%

கடைசி 5 மாவட்டங்கள்

1. ராணிப்பேட்டை - 83.54%

2. நாகை - 84.41%

3. கிருஷ்ணகிரி - 85.36%

4. மயிலாடுதுறை - 86.31%

5. செங்கல்பட்டு - 88.27%

கடந்த 5 ஆண்டுகளில் தேர்ச்சி விகிதம்:

1. 2019 -95.2%

2. 2020 -100%

3. 2021-100%

4. 2022-90.1%

5. 2023-91.39%

சிறைவாசிகளில் சுமார் 50% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறையிலிருந்து தேர்வு எழுதிய 264 சிறைவாசிகளில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.