தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நிறைவடைந்தது. 4,107 மையங்களில் 9,08,000 மாணவ-மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே அறிவித்தபடி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேர்ச்சி விகிதம், 91.55 சதவிகிதம் என்றுள்ளது. வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் (5.95 சதவிகிதம் கூடுதலாக) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவிகள் 4,22,591 பேரும், மாணவர்கள் 3,96,152 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 88.58 சதவிகிதம் பேரும், மாணவிகள் 94.53 சதவிகிதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்களுக்கு அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது என தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்வு முடிவுகளை
www.tnresults.nic.in மற்றும்
ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ, சி.ஐ.எஸ்.இ.ஐ போன்ற கல்வி வாரியங்களை தொடர்ந்து தமிழக தேர்வு துறையும் பொதுத் தேர்வு முடிவுகளை டிஜிலாக்கர் தளம் வழியாக அறிந்து கொள்ளும் வசதியை இம்முறை அறிமுகம் செய்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம் தொடர்பான விவரம், இதோ.... :
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100-க்க் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர் எத்தனை பேர் என்ற விவரம், இதோ... :
தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தில் முதல் 5 இடத்தில் உள்ள மாவட்டங்கள் பற்றிய விவரம், இதோ...