தமிழ்நாடு

தமிழகத்தில் சராசரியாக 10 அடிக்கு மேல் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்

தமிழகத்தில் சராசரியாக 10 அடிக்கு மேல் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்

webteam

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. சராசரியாக 10 அடிக்கு கீழாக நிலத்தடி நீர்மட்டம் பல மாவட்டங்களில் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் எவ்வளவு நிலத்தடி நீர்மட்டம் உள்ளது என்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் பார்க்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 12 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் இந்த ஆண்டு ஜூலையில் 35 அடியாக குறைந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 24 அடியிலிருந்து 43 அடியாக சரிந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நிலத்தடி நீரின் மட்டம் 18 அடியில் இருந்து 34 அடிக்கு இறங்கியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை நீர் மட்டம் 20 அடியிலிருந்து 35 அடிக்கு இறங்கியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நீர் மட்டம் 30 அடியிலிருந்து 43 அடிக்கு குறைந்துள்ளது. இதேபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் நிலத்தடி நீர் மட்டம் 12-ல் இருந்து 25 அடிக்கு குறைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 18 அடியில் இருந்து 29 அடியாக சரிந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 23 அடியிலிருந்து 33 அடியாக குறைந்துள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் நீர் மட்டம் 49 அடியிலிருந்து 59 அடிக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை நீர் மட்டம் 40 அடியிலிருந்து 52 அடிக்கு குறைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் நீர் மட்டம் 39 அடியிலிருந்து 49 அடிக்கு சரிந்துள்ளது. தேனி மாவட்டத்தில் 38 அடியிலிருந்து 47 அடியாக நீர் மட்டம் குறைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நீர் மட்டம் 38 அடியிலிருந்து 46 அடியாக நீர் மட்டம் குறைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மட்டம் 34 அடியிலிருந்து 44 அடிக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நீர் மட்டம் 33 அடியிலிருந்து 43 அடிக்கு குறைந்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் நீர் மட்டம் 29 அடியிலிருந்து 38 அடிக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 28 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் 36 அடியாக குறைந்துள்ளது. இவை தவிர வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் சராசரியாக 5 அடி அளவுக்கு நிலத்தடி நீர் குறைந்துள்ளது.