தமிழ்நாடு

ஊதிய உயர்வுக் கோரி 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டம் 

ஊதிய உயர்வுக் கோரி 18 ஆயிரம் அரசு மருத்துவர்கள் போராட்டம் 

webteam

ஊதிய உ‌யர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு‌ மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‌ஊதிய உயர்வு, மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது, உயர் சிறப்பு மருத்துவ படி‌ப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதுவரை கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள 18 ‌ஆயிரம் அரசு மருத்துவர்களும், இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.