தமிழ்நாடு

‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ -  ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி

‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ -  ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி

webteam

‘தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் நகைச்சுவை நடிகர் சார்லி முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் சார்லி. இவர் குணசித்திரம் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 59 வயதாகும் சார்லி ‘தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு முனைவர் மற்றும் கௌர டாக்டர் பட்டங்களை வழங்கினார்.  இதில் பண்பாடு மற்றும் ஆட்சி மொழி அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ‘தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் அழகப்பா பல்கலை கழகத்தில் சார்லி  எம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.