தமிழ்நாடு

போராட்டத்தை தீவிரப்படுத்தும் ஸ்விகி ஊழியர்கள்..!

Rasus

5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக ஸ்விகி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆன்லைன் உணவு வர்த்தகத்தில் முன்னணியாக இருப்பதில் ஒன்று ஸ்விகி. வீட்டில் இருந்து வேண்டிய உணவுகளை ஆர்டர் செய்தால் போதும். வீட்டிற்குகே உணவுவந்துவிடும். இதற்காக நாள்தோறும் ஏராளமான ஊழியர்கள் வெயில், மழை, டிராபிக் பாராமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். இருந்த இடத்திற்கே உணவு தேடிவருவதாலும், சில நேரங்களில் ஆஃபர் வழங்கப்படுவதாலும் ஸ்விகியின் பயன்பாடு அதிகரித்து கொண்டுதான் வருகிறது. ஆனால் ஸ்விகி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மிகக் குறைவு எனக் கூறப்படுகிறது. டெலிவரியை பொறுத்தே அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தங்களின் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக ஸ்விகி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது வார இறுதி ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும். இரவு நேர போலீசாரின் கெடுபிடிக்ளை தவிர்க்க ஸ்விகி தரப்பில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். முதல் ஆர்டருக்கு 45 ரூபாயும், இணைப்பு ஆர்டருக்கு 25 ரூபாய் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாறு மண்டல ஸ்விகி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் அடையாறு கிளையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிகிறிது. பேச்சுவார்த்தை தோல்வியைடந்தால் மீண்டும் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.