தமிழ்நாடு

சம்பளத்தை குறைத்த ஸ்விகி நிறுவனம் : போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

சம்பளத்தை குறைத்த ஸ்விகி நிறுவனம் : போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்

webteam

திருச்சியில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனம் சம்பளம் குறைப்பு நடவடிக்கையை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. பொருளாதார இழப்பை சரிசெய்ய சில தனியார் நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பையும் சம்பள குறைப்பையும் கையில் எடுத்துள்ளது.

அந்த வகையில் வீடு வீடாக சென்று உணவு விநியோகம் செய்யும் ஸ்விகி நிறுவனம் ஊழியர்களின் மாத ஊதியத்தையும், ஊக்கத்தொகையும் ஐந்தாயிரம் ரூபாய் வரை குறைத்துள்ளதாக தெரிகிறது.

இதை கண்டித்து 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இன்று திருச்சியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொரோனா பரவி வரும் இந்த சூழலிலும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யும் தங்களது ஊதியத்தை ஸ்விகி நிறுவனம் குறைக்கக் கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே ஊதியக் குறைப்பு தொடர்பாக நேற்று ஸ்விக்கி நிறுவனத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து இன்று தில்லைநகரில் உள்ள ஸ்விகி அலுவலகத்தின் முன்பு நீண்ட வரிசையில் நின்று தங்களுடைய எதிர்ப்பை உழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்விகி நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று திருச்சியில் பெரும்பாலான பகுதிகளில் உணவு விநியோகம் தடைபட்டுள்ளது.