எஸ்.வி.சேகர் கூகுள்
தமிழ்நாடு

“தமிழகத்தில் பிராமணர்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறார்களா?..” - கஸ்தூரிக்கு எஸ்வி சேகர் அதிரடி பதில்

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

PT WEB

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயால் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர, ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இல்லை என நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகள் குறித்த புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் எஸ்வி சேகர் பதில் அளித்துள்ளார்.

ராதாரவிப் பற்றி

தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர் சங்கத்தின் தலைவராக உள்ள ராதாரவி சங்கத்தை தவறாக வழி நடத்துவதாக எஸ் வி சேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணாமலை

அண்ணாமலைப்பற்றி

”ஒழுங்காக படிக்காத காரணத்தால் தான் அண்ணாமலை அரசியலுக்கு வந்தார். இப்போது மீண்டும் லண்டனுக்கு படிக்க சென்றிருக்கிறார். பாஜக தலைவராக மட்டுமில்லை அரசியலில் இருப்பதற்கே அண்ணாமலைக்கு தகுதி இல்லை” என கூறினார்.

பாஜகவைப்பற்றி

பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது எனக் கூறிய அவர், “தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்த தாக்ககுதலும் நடைபெறவில்லை... பிராமணர்களுக்கு எதிரான இனப்படுகொலை பாஜகவில் தான் நடக்கிறது” என்று கூறினார்.

சீமான் பற்றி

”எந்தக் கட்சி பிராமணர்களுக்கு நல வாரியம், தனி இட ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை கொண்டு வருவதாக சொன்னாலும் அவர்களுக்கு ஆதரவாக வரும் சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எந்த கட்சியாக இருந்தாலும் ஆதரவளிப்பேன். விஜய் கட்சியில் சேரக்கூடியவர்கள் சீமான் கட்சியில் இருந்தது தான் அதிகம் வருவார்கள் “என்றும் கூறினார்.

தவெக தலைவர் விஜய்

விஜய் பற்றி

”நடிகர் விஜய்யால் சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் ஆனால் உடனடியாக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பில்லை” எனவும் கூறினார்.

உதயநிதி ஸ்டாலின் பற்றி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எளிதில் பதவிக்கு வந்துவிடவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறார். பல எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களை ஜெயிக்க வைத்திருக்கிறார். எனவே கட்சிக்கு அவர் தேவைப்படுகிறார்”.