உச்சநீதிமன்றம் முகநூல்
தமிழ்நாடு

"கோவில்களில் கிடைக்கும் நன்கொடை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது" - உச்சநீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கோவில்கள் மூலம் கிடைக்கும் நன்கொடையை சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

PT WEB

தமிழகத்தில் கோவில்கள் மூலம் கிடைக்கும் நன்கொடையை சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மாறாக அதிகாரிகளுக்கு சொகுசு கார் வாங்குவது போன்ற ஆடம்பர செலவுகளுக்கு அரசு பயன்படுத்துவது தவறு என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கோயில் நிதியில் மறைமுகமாக முறைகேடுகள் செய்யப்படுவதாக பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, "உண்டியல் வருவாய் மற்றும் நன்கொடை உள்ளிட்டவற்றை செலவிடவும் அதனை முறைப்படுத்தவும் ஏதேனும் திட்டம் உள்ளதா? தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கோவில்களில் கிடைக்கப்பெறும் நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது?.

கோவில்களின் நிதியை கல்வி நிலையங்கள் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அதிகாரிகளுக்கு உயர் ரக சொகுசு கார்கள் வாங்குவது உள்ளிட்ட ஆடம்பர நிகழ்வுகளுக்காக பயன்படுத்தினால் அவை தவறு" என்று தெரிவித்துள்ளார். மேலும் , மனு குறித்து தமிழக அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.