தமிழ்நாடு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்க வழக்கு - பிப். 4ம் தேதி விசாரணை

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் பதவி நீக்க வழக்கு - பிப். 4ம் தேதி விசாரணை

webteam

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை பிப்ரவரி 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஓபிஎஸ் உள்ளிட்டோர் எதிராக வாக்களித்தனர். இதையடுத்து ஒபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததாக கூறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க கோரி கடந்த வாரம் திமுக சார்பில் தலைமை நீதிபதி முன் முறையிடப்படது.

இந்நிலையில், திமுகவின் சக்கரபாணி உள்ளிட்டோர் தொடுத்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் பிப்ரவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.