தமிழ்நாடு

டாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

டாஸ்மாக் விவகாரம்: உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

webteam

தமிழகத்தில் 1,300 டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தமிழகத்தில் மூடப்பட்ட மதுபானக் கடைகளில், ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் மீண்டும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி அமைப்பு சாலைகளாக மாற்றாமல் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை உடனடியாக மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீடு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் கடைகளை திறப்பதில் சண்டிகருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி தமிழக அரசு வாதிட்டது. இதனை கேட்ட நீதிமன்றம், இதுவரை திறக்கப்பட்ட கடைகள் குறித்து தனித்தனியாக ஆய்வறிக்கை தாக்கல் செய்யவும், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக முறையிடுமாறும் உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.