தமிழ்நாடு

உச்சகட்டத்தில் கத்தரி: தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில் !

jagadeesh

தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது. இது குறித்துத் தெரிவித்திருந்த சென்னை வானிலை ஆய்வு மையம், ''வெப்பநிலை பொதுவாக மே மாதத்தில் சற்றே அதிகரித்துக் காணப்படும். அந்நிலை இந்த ஆண்டும் தொடரும். அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அங்கேயே நீடிக்கிறது. புயலாக மாற வாய்ப்பு குறைவு. எனவே கடலிலேயே அது வலுவிழக்கும்" எனக் கூறியிருந்தது.

மேலும் தமிழகத்தில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பு உண்டு. மே 12 ஆம் தேதி வாக்கில் வங்கக் கடலில் ஒரு தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால் தமிழகத்தில் மழை உள்ளதா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கத்தரி வெயில் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும்' எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 7 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி அளவை தாண்டியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி திருச்சி 105.08 டிகிரி செல்சியசை தாண்டியுள்ளது. மதுரையில் 10.78, சேலத்தில் 104.54, தருமபுரியில் 102.56 டிகிரியும் பதிவாகியுள்ளது.

மேலும் திருத்தணி, கரூர் பரமத்தியில் தலா 102.2, மதுரை விமான நிலையத்தில் 101.12, வேலூரில் 100.94, கோவையில் 100.76 டிகிரியையும் தொட்டுள்ளது.