தமிழ்நாடு

தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில் !

தமிழகத்தில் 9 இடங்களில் சதமடித்த வெயில் !

jagadeesh

தமிழகத்தில் இன்று 9 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது.

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்தக் கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில் வங்கக் கடலில் உயர் உச்ச புயலாக இருந்த amphan புயல் தற்போது மிக கடும் புயலாக (super cyclone) மாறியுள்ளது. இது ஒடிஷா, மேற்கு வங்கம் அருகே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் வடக்கு மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் 55-65 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அங்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Amphan புயலால் ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம், அசாம், மேகலயாவில் மே 21 வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று திருச்சி 105.98, கரூர் பரமத்தி 104.9, மதுரை விமான நிலையம் 104.36, நாமக்கல் மற்றும் சேலம் 104, மதுரை 101.48, திருத்தணி அதிராம்பட்டினம் 101.12, தருமபுரி 100.76 ஆகிய இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியிருக்கிறது.